Pages

Sunday, November 20, 2016

சாம்பார் வைக்கும்போது...

சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்....

புடலங்காய் கூட்டு

அவரைக்காய் பொரியல்

Saturday, November 19, 2016

சென்னை மட்டன் தொக்கு


 mutton gravy க்கான பட முடிவு
தேவையான பொருட்கள் :

மட்டன்  1/2 கிலோ

வெங்காயம் 200 கிலோ

தக்காளி 200 கிலோ

இஞ்சி பூண்டு விழுது

ப. மிளகாய்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

எலுமிச்சை சாறு

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

தனியா தூள்  - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகு தூள்

உப்பு

எண்ணெய்

சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை

செய்முறை :


• குக்கரில் மட்டன், வெங்காயம், ப. மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்,

• கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த மட்டனை போட்டு வதக்கவும்.

• தொக்கு நன்கு சுண்டியதும் மிளகு தூள், எலுமிச்சை சாறு பிழியவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தூவி இறக்கவும்


  

கொத்தமல்லி சூப்


 coriander soup க்கான பட முடிவு
தேவையான பொருட்கள் :

பச்சை கொத்தமல்லி - 2 கட்டு,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப,
பிரெட் துண்டு - 2,
தண்ணீர் - 4 கப்.

செய்முறை :

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• பிரெட்டை மிக்சியில் பொடிக்கவும்.

• அதில் 4 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

• கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.

• வெண்ணெயும் சேர்க்கவும்.

• கார்ன்ஃப்ளார் சேர்த்ததும், கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்.

•  ரொம்பவும் கெட்டியாவதற்குள், அதில் கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கி, உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பரிமாறவும். 

வெந்நீர் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்